பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'காலா'. மும்பை தாராவியை முக்கிய கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் தாதா ரஜினியின் முக்கிய அடியாளாக நடிகர் அருள்தாஸ் நடிக்கிறார். இவர் 'நீர்ப்பறவை', 'சூது கவ்வும்', 'நான் மகான் அல்ல', 'கதகளி' உள்பட சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவாளராகவும் படங்களில் பணியாற்றி நடிகரானவர். அருள்தாஸ் கால்களின் மீது ஜீப் எதிர்பாரமல் ஏறியது. இந்த விபத்தில் அவரது கால் விரல்கள் மோசமாக நசுங்கின. உடனே, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எழும்பு முறிவு கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது. அதனால் நேற்று 'காலா' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
click and follow Indiaherald WhatsApp channel