தமிழில் இரண்டு படங்கள், தெலுங்கில் ஒரு படம் என நடித்தும், பல ரசிகர்களை பெற்றும் கூட, இன்னும் தனது வெற்றி கணக்கை துவக்க முடியவில்லை நிவேதா பெத்துராஜால். அடியே அழகே என்ற ஒரே பாடலில் ஹிட்டடித்த இந்த மதுரைக்கார பொண்ணுக்கு, இன்று வரை அந்த பாடல் மட்டுமே அடையாளமாக ஆகிவிட்டது தான் கொடுமை.


Image result for nivetha pethuraj tik tik tik


 அந்த பாடல் இடம் பெற்ற ஒரு நாள் கூத்து படமும் ஓடவில்லை, அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த பொதுவாக எம்மனசு தங்கம் படமும் கை  கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக பெட்டிக்குள் கிடந்த இவரது அடுத்த படமான டிக் டிக் டிக் வெளிவரவுள்ளது. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என்று கூறப்படுகிறது. 


Image result for nivetha pethuraj tik tik tik


இப்படத்தையே கடைசி அஸ்திரமாக நம்பி களமிறங்கும் நிவேதா, இப்படத்தில் ஜெயம் ரவியுடன் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் ஒரு துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளார்.


Image result for nivetha pethuraj tik tik tik

மேலும் கவர்ச்சியில் அடுத்த படியாக, நெருக்கமான காதல் காட்சிகள், முத்தக் காட்சிகள், மற்றும் நீச்சல் உடை குளியல் கவர்ச்சி காட்சியென, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக வந்த நிவேதா பெத்துராஜ், இந்த படத்தில் மாடர்ன் மங்காத்தாவாக வலம் வரவுள்ளார். ஜனவரியிலேயே வெளியாகியிருக்க வேண்டிய டிக் டிக் டிக், இப்பொழுது நிவேதாவின் அதிரடி கவர்ச்சி மழையுடன், ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது. இந்த படமாவது நிவேதாவுக்கு வெற்றி கனியை கொடுக்குமா பாப்போம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: