நடிகை சமந்தா இந்த ஆண்டு நடித்த அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர். ராமச்சரனுடன் நடித்த ரங்கஸ்தலம் விஷாலுடன் நடித்த இரும்புத்திரை மற்றும் கீர்த்தி சுரேஷுடன் நடித்த மஹாநடி ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில் அடுத்ததாக நாளை சமந்தா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.



தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அவருக்கு படங்கள் வர உள்ளன. முதலாவதாக அறிமுக இயக்குனர் பவன் குமாரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் யூ டர்ன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தொடர் கொலைகளை துப்பு துலக்கும் ஒரு பெண் பத்திரிகையாளரை பற்றிய படமாகும்.



மேலும் தமிழில் சிவ கார்த்திகேயனின் சீமராஜா படத்திலும் நடித்துள்ளார். இதில் யூ டர்ன் நேரடியாக மோத இருப்பது சமந்தாவின் கணவரான நாக சைதன்யாவின் படமான சைலஜா ரெட்டி அல்லுடுவுடன். பார்க்கலாம் சமந்தா தன வெற்றி வேட்டையை தொடருவாரா இல்லை கணவரிடம் தோல்வி அடைவாரா என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: