நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடக்கும் என்றும்  ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனின்  தலைமையில் தேர்தல் நடைபெறும் என்றும் கூறிய முன்னாள் நடிகர் சங்க தலைவர் நாசர்,இன்னொரு தகவலாக தற்பொழுது பதவி காலம் முடிந்த அதே  நிர்வாகிகளே மீண்டும்  அந்தந்த பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று   நடிகர் சங்க கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறினார்.


Vishal and Kajal 'UNDER ONE ROOF'


இதனை அடுத்ததாக நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் விஷால் போட்டியிடும் பட்சத்தில்  அவரை எதிர்ப்போம் என்று கூறி விஷாலை தவிர,  கார்த்தி போன்ற வேறு எவரேனும் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம் என்று கூறி விஷால் மீதான கோபத்தை பதிவு செய்துள்ளார்.

Image result for vishal apherald


இப்படிப்பட்ட தடைகள் எல்லாம் இருந்தாலும் கூட விஷால் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்து போட்டியிட போவதாக நடிகர் உதயா ஏற்கனவே கூறியிருந்தார். பாண்டவர் அணி சார்பில் விஷால்,  நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் செயலாளர், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிடவுள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: