டேராடூன்:
உத்தரகாண்டில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பயத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. 


உத்தரகாண்ட் மாநிலம் தெரி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் அங்குள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து வருகிறது. கான்சாலி பகுதியில் இடைவிடாது கொட்டிய மழை ஒரு வீட்டின் சுவரை இடிந்து விழ செய்ய இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பி உள்ளது.


அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வேறு அம்மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தள்ளதால் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.



Find out more: