சென்னை:
யாராக இருந்தால் என்ன நீதிபதியாகவே இருந்தால் என்ன? திட்டம் போட்டு திருடும் போது யார் என்று பார்ப்போமா என்று கொள்ளையர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.


ஆமாங்க... சென்னையில் வசிக்கும் ஒரு பெண் நீதிபதி வீட்டில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ள சம்பவம்தான் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் நீதிபதி பநீஜா,  சென்னையை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.


 இவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போலீசார் வீட்டில் கொள்ளை போன சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள் இப்போது நீதிபதி வீட்டில் கைவரிசை காட்டி சென்னை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். 


Find out more: