ஸ்டார் என்ற வார்த்தை தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். ஸ்ருதி ஹாஸன் கையில் சபாஷ் நாயுடு படம் மட்டுமே உள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி கருத்து வேறுபாட்டில் வெளியேறிவிட்டார்.

முழுமையான திரைக்கதையை அளிக்கவில்லை என்று காரணம் கூறியுள்ளார்.எனக்கு ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்காது. அந்த வார்த்தையோடு நிறைய பிரஷரும் சேர்ந்து வருகிறது. நான் விரும்புவதை செய்வதற்கு நல்ல சம்பளம் பெறுபவராக நல்ல நடிகையாக என்னை கருதுகிறேன்.(தனுஷுக்கு ஸ்டார் என்று அழைப்பது பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் அதை வெளியே அதிகம் காட்டிக் கொள்ள மாட்டேன்.

என் வாழ்வில் பல சங்கடங்களை கடவுளின் அருளால் கடந்து வந்துள்ளேன்.என் அப்பா கமல் ஹாஸன் தான் என் ரோல் மாடல் சூப்பர் மேன். சபாஷ் நாயுடு படத்தில் அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம். அவர் என் வேலையில் திருப்தியாக இருப்பது எனக்கு பெருமை.
click and follow Indiaherald WhatsApp channel