இஸ்தான்புல்:
அதிரடியாக... அதிரடியாக நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?
இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் அரசு வக்கீல்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவம்தான் அது.
துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். இருந்தாலும் மக்களின் துணை கொண்டு அந்த முயற்சியை அதிபர் முறியடித்தார்.
இந்த புரட்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இவரது ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீசார், நீதிபதிகள், வக்கீல்களை துருக்கி அரசு தீவிரமாக வேட்டையாடி வருகிறது. இதுவரை 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11,567 பேர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் 173 அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்களை கைது செய்வதற்கான வாரண்டுகளுடனும் அவர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர விசாரணைக்கு பின்னர், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பலரை கைதும் செய்யப்பட்டனர். ஆனால் எத்தனை பேர் கைதாகினர் என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை