
இந்த திட்டபணிகளில் மழைநீர் வடிகால் அடிப்பகுதியில் நீர் பூமியில் இறங்க காங்கிரீட் போடக் கூடாது என்று உத்தரவிட சண்முகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் மழை நீரை சேமிக்க எந்த திட்டமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சென்னையில் எத்தனை நீர் நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பி, மழை நீர் சேமிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel