மாணவி அனிதா பெயரில் அவரது சொந்த ஊரான குழுமூரில் தமிழக அரசு மருத்துவமனை ஒன்று தொடங்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் கோரிக்கை இன்று விடுத்துள்ளார். அதிம மதிப்பெண் எடுத்தும் மருத்துவ கனவு கலைந்தததால் மனவிரக்தியடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு மாநிலம் முழுவதும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் அனிதாவுக்கு அறிவித்த நிதியுதவியையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். மேலும் நீட் தேர்வில் எல்லா மாணவர் சார்பாகவும் நல்ல முடிவை எடுத்த பிறகு வாங்கி கொள்வதாகவு்ம தெரிவித்தனர்.

இதுகுறித்து நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை இப்போ சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அனிதா இறப்புக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். டாக்டராகி செய்யும் அறுவை சிகிச்சை தன் மறைவின் மூலம் ஆட்சியாளர்களுக்கு செய்து விட்டார்.
click and follow Indiaherald WhatsApp channel