சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹீரோ படத்தின் ட்ரைலருக்கு எல்லா தரப்பிலிருந்தும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக படத்தொகுப்பாளர் ரூபன் தனது குழுவிற்கு கிடைத்து வரும் வரவேற்பால் பெரு மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த பாராட்டுரைகள் அனைத்தும் இயக்குநர் பி.எஸ்.மித்திரனுக்குத்தான் செல்லவேண்டும். காரணம் அவரது தெளிவான பார்வையும் மற்றும் சரியான திட்டமிடலும்தான் என்கிறார்.விஷுவல் புரொமாக்களை எப்படி வடிவமாக்க வேண்டும் என்று குழுவாக நாங்கள் திட்டமிட்டு செயலாற்றியதற்கு இப்போது கிடைத்து வரும் வரவேற்பு எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் ரூபன்.

ஹரோ படத்தின் முன்னோட்டம் முழுவதும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற பாத்திரங்களின் பங்களிப்புக்கும் வாய்பு வழங்கியிருக்கிறது. இது குறித்தும் விவரித்த படத்தொகுப்பாளர் ரூபன் மேலும் தொடர்ந்து கூறியதாவது...

இதற்காக நான் சிவகார்திகேயனுக்குதான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். மிகப் பெரிய நடிகராக இருந்தும் அவர் எங்கள் பணியில் எப்போதும் குறுக்கிடவில்லை. குறிப்பாக டிரைலர் கட் பண்ணும்போதும் எங்களை முழு சுதந்திரத்தைக் கொடுத்தார்.. டிரைலரையும் பின்னர் முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்  என்று சொல்லும் ரூபன், எஸ்.கேயினின் இந்த செய்கையும் பாராட்டினார்.

 

தொடர்ந்து பேசிய ரூபன் ஹீரோ படம் குறித்து கூறியதாவது...

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே பலரும் சொன்னதை இப்போது நான் மீண்டும் சொல்கிறேன் என்று நினைத்தாலும் கவலையில்லை. அதுதானே உண்மை. ஒரு திரைப்படம் என்பதைத்தாண்டி, சமூகப்பொறுப்புடன் ஒரு காட்சியை கருத்தாக்கம் செய்யும் மித்ரன் வசீகரமான முறையில் அதை வழங்கியிருக்கிறார். ஹீரோ படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய ஜனரஞ்சகப்படம் என்றாலும், இதிலுள்ள செய்தி படம் பார்ப்பர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டும் வரவேற்பும் பெறும் என நான் நம்புகிறேன். திரையில் தோன்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு, ஆதிக்கம் செலுத்தும் யுவன் சங்கர் ராஜா சாரின் மனம் மயக்கும் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் அருமையான ஒளிப்பதிவு என்ற ஹீரோ படத்தின் ஒவ்வொரு அம்சமும் ரசிகர்களிடம் வெகுவான பாராட்டுதல்களைப் பெறும் என்றார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: