ஐதராபாத்:
ஸ்கின் பிராப்ளம் நடிகை தான் காதலிப்பது யார் என்று சூசகமாக... அட சற்றே வெளிப்படையாகத்தாங்க... செய்தியை வெளியிட்டார். அவர் சொன்னதை வைத்து அந்த தெலுங்கு நாயகன் யார் என்பதை எல்லாரும் கண்டுபிடிச்சது அடுத்த விஷயம்.


இது சும்மா டிரைலர் தாங்க... மெயின் பிக்சர் என்ன தெரியுங்களா?நடிகையின் ஜாடை மாடையான பேச்சு அந்த தெலுங்கு நாயகன் யார் என்று தெரிய காரணமாக இருந்ததால் அவரது தந்தையான "தோழா" நடிகருக்கு செம டென்ஷனை ஏற்படுத்தியிருக்கு. இதயமேன்னு பாடத்திலும் பாடினார். நிஜத்திலும் காதலித்து மணம் புரிந்தவர் அவர்.

செம கூலான நடிகரான அவருக்கு ஸ்கின் பிராப்ளம் நடிகையின் ஸ்டேட்மெண்ட் கார மிளகாயை கடித்தது போல் இருக்க அதிர்ச்சி அடைந்தார். பையனை அழைத்து விவரம் கேட்டு, அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றாராம்.


அதோடு, நடிகையையும் அழைத்து, இந்த வேலை எல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதே என்று எச்சரித்தாராம். இவர் மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம்...நாங்க செய்யக் கூடாதா?’’ என்று முணுமுணுத்தபடி வெளியேறி இருக்கிறார் ஸ்கின் பிராப்ளம் நடிகை! இதுதான் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்வது என்பதோ?



మరింత సమాచారం తెలుసుకోండి: