சென்னை:
வருது... வருது... நாளைக்கு வருது... குற்றமே தண்டனை படத்தின் டிரைலர் நாளை வருது என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளை குவித்தவர் இயக்குனர் மணிகண்டன். அதாங்க... காக்கா முட்டை படத்தின் இயக்குனர. இவரோட அடுத்த படைப்புதான் ‘குற்றமே தண்டனை’ படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்போ டிரைலர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


டிரைலர் நாளை வெளியாக அத்துடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரையே வித்தியாசப்படுத்தி கொடுத்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. திரில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக இது அமைந்துள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.



Find out more: