தங்கர் பச்சான் இயக்கிய 'அழகி' திரைப்படத்தில் நடித்த நந்திதா தாஸ்,  எழுத்தாளர் குட்டி ரேவதி இயக்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன.


இதை அறிந்த நந்திதா தாஸ், இதற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது.


'நான் எனது மகனுடன் விடுமுறையை கழித்து வருகிறேன். நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'மேண்டோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்  கொள்ள உள்ளேன். இந்த படத்தை தவிர நான் வேறு எந்த படத்திலும் புக்காகவில்லை. தமிழ் படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக வெளிவந்த தகவல் முற்றிலும் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்' என்று விளக்கம் அளித்துள்ளார்.


நந்திதாஸ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது தற்போது உறுதியான நிலையில், விரைவில் இந்த படத்தின் கதாநாயகி பெயர் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: