சென்னை:
இசை, நடிகராக இருந்தாரு... இப்ப இயக்குனராகிட்டாராம். ஆமாங்க... ஆனா படத்துக்குள்ள படம் இயக்குகிறாராம். யார் தெரியுங்களா?


பென்சிலில் ஆரம்பிச்சார்... டார்லிங் ஹிட் அடித்து முந்திக்கொள்ள... அடுத்து வந்த நடிகைகள் பெயர் கொண்ட படம் டாப் கியருக்கு மாற்றி விட்டுடுச்சு ஜி.வி.பிரகாசை. இவர் படம் தயாரிப்பு தரப்பை சந்தோஷமாக்க இப்ப இவரு...கையில ஏகப்பட்ட படம். இதுல ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில்தான் இவரு டைரக்டராக வர்றாராம். படத்திற்குள் படம் எடுக்கிறாராம்.


இப்பவே கதையை சொல்லிட்டா எப்படீங்க... இதுல கயல் ஆனந்தி ஜோடி சேர, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலான்னு பெரிய டீமே களத்தில் இருக்காம். இந்த படத்தோட படப்பிடிப்பு கிடுகிடுவென ஓடிக்கிட்டு இருக்காம்... இருக்காம்... நல்லா டைரக்ட் பண்ணுறாரா...?


మరింత సమాచారం తెలుసుకోండి: