சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் தன்ஷிகா, ரஜினியின் மகளாக நடித்துள்ளார்.ராதிகா அப்டே, ரஜினியின் மனைவியாக நடித்துள்ளார்.


மேலும் இந்த படத்தில் ரஜினி இரண்டு தோற்றத்தில் நடித்துள்ளார்.  அட்டகத்தி தினேஷ், ஜான் விஜய், கிஷோர், கலையரசன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் தெலுங்கு ஆடியோ வரும் ஞாயிறு அன்று 'திங்க் மியூசிக்' தலைமையில்  வெளியாகிறது. 


இதோடு  'கபாலி'  ஹிந்தி ஆடியோ நாளை பிரம்மாண்டமாக வெளிவருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி  மற்றும் மலாய் மொழிகளில் வெளிவரவுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்து, சுத்தமான 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது இந்த படத்திற்கு மேலும்  பெருமை அளிக்கிறது. மேலும் கபாலி திரைப்படம் மொத்தம் 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடவுள்ளதாக கூறப்படுகிறது. 'கபாலி' திரைப்படம் 'யு' சான்றிதழ், பெற்றுள்ளதால் படக்குழுவினர் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு திரையரங்கு வரி சலுகை கிடைக்க வாய்ப்புள்ளது.


மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள  இந்த படம் வரும் ஜூலை 22-ந்தேதி திரையரங்கில் வெளிவரும் என்று படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: