
இந்நிகழ்ச்சியில் பேசிய மிஸ்க்கின் நடிகர் மம்மூட்டியை புகழ்ந்து பேசுவதாக நினைத்து தான் ஒரு இளம் பெண்ணாக இருந்திருந்தால் மாமம்மூட்டியை காதலித்திருப்பேன் என்றார். அதன் பின்னர் உணர்ச்சி வசப்பட்டவர் தான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை ரேப் செய்திருப்பேன் என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா இது பற்றி கறுத்து தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும் எங்கு எப்படி பேசுகிறோம் என்று பார்த்து பேச வேண்டும் என்றும் இது போன்ற கருத்துகள் மிகவும் ஆபத்தானவை என்று உணராமல் பேசுவது மிகவும் கேவலமானது என்று கூறி இயக்குனர் மிஸ்க்கின் அவர்களை சாடியுள்ளார். நடிகர் பிரசன்னா முன்னொரு காலத்தில் இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்து தான் ஒரு கம்பேக் கொடுத்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel