'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்திற்கு பிறகு, கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு இரண்டாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 


சிம்பு, மஞ்சிமா மோகன் இருவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த, இந்த படத்தில் உள்ள 'தள்ளி போகாதே' பாடலின் படப்பிடிப்பு காட்சி மட்டும் பாக்கியுள்ளன. 


சம்பள விவகாரத்தினால், சிம்பு இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கவுதம் மேனன் இந்த பாடல் இல்லாமலே, இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். 


வரும் ஆகஸ்ட் 19-ந்தேதி, இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வந்துள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: