சென்னை:
நண்பர்களிடமே அன்புன்னா... அன்பு அப்படி ஒரு அன்பாக பழகும் உச்ச நடிகர் தன் மாப்பிள்ளையிடம் எப்படி இருப்பார். சொல்லத்தான் வேண்டுமா... இதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லோரிடத்திலும் அன்பாக பழகுவார். தன் மருமகன் தனுஷை அவருக்கு ரொம்ப... ரொம்ப பிடிக்கும். தன் பேரக்குழந்தைகளை விட தனுஷ் மீது ரொம்ப பாசம் காட்டுவார் ரஜினி.


இந்நிலையில் சமீபத்தில் கபாலி படத்தை தனுஷ் விசில் அடித்து ஆரவாரத்துடன் பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரஜினி பார்வைக்கும் போய் இருக்கு. கண்கள் கலங்கிடுச்சாம் அவருக்கு. இதற்கிடையில் மருமகன் பிறந்தநாளும் வரவே நேராகவே போய் வாழ்த்து சொல்ல... இந்த அன்பில் தனுஷ் உருகியே விட்டாராம். அதுமட்டுமா? அடுத்து ரஜினி கேட்ட வார்த்தையால் துள்ளியே குதித்துவிட்டாராம தனுஷ். 


ரஜினி அப்படி என்ன கேட்டார் தெரியுங்களா? தனுஷ் இன்று ஒரு நாள் உங்கள் வீட்டில் தங்கலாமா? என்று குறும்பாக கேட்டுள்ளார். இதுக்குதான் அவரு அப்படி தலை வீட்டு மேற்கூரை முட்டும் அளவிற்கு துள்ளி குதித்துள்ளாராம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: