சென்னை:
நாங்க இருக்கோம் என்று தல ரசிகர்கள் அருண் விஜய்க்கு இப்போது சப்போர்ட் செய்து வருகின்றனர். இதில் ஒருவர் ஒரு படி மேலேயே சென்று விட்டார். விஷயம் என்னவென்றால்...


என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண்விஜய் "தல" ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரம் ஆகிவிட்டார். இவரது நடிப்பில் உருவான வா டீல் படம் நீண்டநாட்களாக பெட்டியை விட்டு எட்டிப்பார்க்காத நிலையில் இருந்து வந்தது. 


தற்போது "தல"யின் தீவிர ரசிகரான 7ஜி சிவா இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளாராம். இதனால் இந்த படத்தின் பிரச்னைகள் தீர்ந்து இந்த மாதமே திரைக்கு படம் வருது...வருது... அருண் விஜய்க்கு "தல" மட்டுமின்றி அவரது ரசிகர்களும் துணையாக இருக்காங்கப்பா....


మరింత సమాచారం తెలుసుకోండి: