சென்னை:
பார்ட் 2 காலமாக இது மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இதில் பஞ்ச தந்திரமும் இணைகிறதாம்...


பஞ்சதந்திரம் படத்தின் 2ம் பாகத்தை தான் இயக்கக்கூடும் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஊர்வசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த படம்தான் பஞ்சதந்திரம்.


படத்தை பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தனர் என்பதை மறுக்க முடியாது. இப்போ... இந்த படத்தின் பார்ட்-2 வை எடுப்பது குறித்து ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் சொன்னது இதுதாங்க... பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியா உள்ளது. இதுகுறித்து கமலிடம் கதை சொல்லியுள்ளேன். சேட்டை செய்யும் கணவர்களை 5 பெண்கள் பழிவாங்குவது தான் கதை என்று சொல்லியிருக்கிறார்... சொல்லாதீங்க... சீக்கிரம் திரைக்கு கொண்டுவாங்கப்பா...



మరింత సమాచారం తెలుసుకోండి: