அதர்வா நடிப்பில் அடுத்து 'செம போதை ஆகாத', 'சண்டி வீரன்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இதையடுத்து அவர் தற்போது 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார். இதில் அதர்வாவுக்கு ஒரு ஜோடி இல்லை, 4 ஜோடிகளாம். நான்கு முன்னணி நடிகைகள் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 


ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கயல்’ ஆனந்தி ஆகிய நான்கு பேரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஓடம் இளவரசு இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரனும் நடித்து வருகிறார்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: