சென்னை:
ஒரு நாளைக்கா... ஒரு நாளைக்கா இவ்வளவா... வாயை பிளக்கிறது கோலிவுட். எதற்காக தெரியுங்களா?
சமீபத்தில் "தல" நடித்த படங்கள் தொடர்ந்து செம ஹிட் அடிக்க... எப்போதும் ஓப்பனிங் மாஸாக இருப்பவர் இப்போ எங்கோ போய்விட்டார். இந்த லிஸ்டில் கடைசியாக வந்த வேதாளம் வசூலில் கல்லாவை ரொப்பி, பாக்கெட்டை ரொப்பி என்று புதிய சரித்திரமே படைத்து விட்டது.
அதனால் "தல" கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் கியூவில் நிற்கிறார்கள். இதற்கிடையில் நயன்தாரா சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தல கால்ஷீட் கிடைத்தால் ஒரு நாளைக்கு 1 கோடி கூட தர தயாராக இருப்பதாக கோலிவுட்டில் உலா வரும் செய்தியால்தான் அப்படி வாய்பிளந்து போய் கிடக்கின்றனர்.