மெர்சல் படத்தில் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையதளங்களில் பட்டையை கிளப்பும் நிலையில் அவருக்கு இந்தப் படத்தில் எத்தனை கதாபாத்திரங்கள் என்ற ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் 61வது படம் பெயர் அறிவிக்கப்படாமல் சஸ்பன்ஸாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் பெயருடன் கூடுதலாக ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.

இன்று விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் 61வது படத்தின் பெய்ர், போஸ்டர்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர்.மெர்சல் பட போஸ்டர்கள் வெளியான 3 மணி நேரத்திலேயே 31ஆயிரம் பேர் அதனை ரீடுவீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. போஸ்டர்களுடன் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை ரகளைப்படுத்தி வருவதோடு ரசிகர்களின் டிஸ்ப்ளே புரைஃபைல் பிச்சராக இது மாறியுள்ளது.

மெர்சல் படத்தில் விஜய்க்கு 3 கதாபாத்திரங்கள் என்ற பெரிய சீக்ரெட்டும் தற்போது உடைபட்டுள்ளது. கிராமத்து கெட்டப்பில் ஒரு விஜய், நகரத்து கெட்டப்பில் ஒரு விஜய் என்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டதன் காரணமும் அதற்காக தானாம்.இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ள விஜய் மூன்றாவதாக ஒரு கேரக்டரிலும் நடித்துள்ளாராம். அந்த கெட்டப் டாக்டர் கெட்டப், விரைவில் அந்த போஸ்டரும் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றன.
click and follow Indiaherald WhatsApp channel