சென்னை:
என்ன கபாலியை பின்னுக்கு தள்ளிவிட்டாரா சிவகார்த்திகேயன். என்னதுன்னு மிரட்டக்கூடாது. அப்புறம் சொல்ல வந்தது மறந்து போய்விடும்.


சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தின் வசூல் பிரமாண்டமோ... பிரமாண்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி கபாலியை பின்னுக்கு தள்ள முடியும்?


இருக்குங்க... ஒரு விஷயம் இருக்கே... சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தில் கபாலியை பின்னுக்கு தள்ளிதான் விட்டுள்ளார். என்ன தெரியுங்களா? பிரபல வானொலியில் இந்த வருடம் அதிகம் பேர் கேட்டு ரசிச்ச பாடல் எது என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளது.


இதில்தான் சிவகார்த்திகேயனின் முந்திக்கொண்டுள்ளார். அதாவது ரெமோ படத்தின் "செஞ்சுட்டாளே" பாடல் முதலிடம் பிடிக்க... கபாலியின் "நெருப்புடா" இரண்டாம் இடத்தில் உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: