மும்பை:
ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று 100 நாட்களுக்கு ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். யார் அவர் தெரியுங்களா?


ரஜினி படத்தில் வில்லனாக நடிக்கும் அக்சய்குமாருக்கு தற்போது புதிய இந்தி படத்தில் நடிக்க ரூ.100 கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்காம்.

இந்தி நடிகர்கள் ஒரு படத்திற்கு 2 அல்லது 3 மாதங்களில் நடித்து முடிக்கின்றனர். சல்மான்கான் ஒரு படத்துக்கு ரூ.60 கோடியும், லாபத்திலும் குறிப்பிட்ட சதவீதத்தை பெறுகிறார். அமீர்கான் ரூ.45 கோடி, ஹிருத்திக் ரோஷன் ரூ.30 கோடி வாங்குகின்றனர்.


இந்நிலையில் அக்சய் தனது சம்பள முறையை திடீர் என்று மாற்றி இருக்கிறார். ஒரு படத்துக்கு குறிப்பிட்ட தொகை என்று வாங்குவதற்கு பதிலாக ஒரு நாள் நடிக்க ரூ.1 கோடி என்று சம்பளத்தை நிர்ணயித்துவிட்டாராம். காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை எம்புட்டு முடியுமோ அம்புட்டு காட்சிகள் எடுத்துக்கலாம். ஆனால் சம்பளம் ரூ.1 கோடி என்று புது கண்டிஷன் போட்டுள்ளார். 


அவர் நடிக்கும் படங்கள் 50, 60 நாட்களில் முடிந்து விடுகின்றன. அந்த நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்று கணக்கிட்டு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்கியுள்ளனர்.


தற்போது அக்சய்குமார் நடித்து வரும் ‘ஜாலி எல்.எல்.பி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் அவர் 100 நாட்கள் நடிக்க வேண்டும் என்பதால் இப்போது அவர் சம்பளம் ரூ.100 கோடியாகி உள்ளது. இதனால் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முன்னணிக்கு வந்து விட்டார் அக்சய்.



మరింత సమాచారం తెలుసుకోండి: