சென்னை:
அதை மாற்று... இதை மாற்று என்று கதையில் கறார் காட்டியதால் ஒளி நடிகருடன் இணைய இருந்த படத்தை நிராகரித்துவிட்டாராம் ரஞ்சிதமான இயக்குனர்.


உச்ச நடிகரே ஸ்கிரிப்டை அப்படியே ஏற்றுக்கொண்டார். படமும் சக்கை போடு போட்டு வசூலை அள்ளி குவித்து வருகிறது. அப்படி இருக்கும் போது ஒளி நடிகருக்கு தான் கதை கூறும் போது எவ்வித கரெக்சனும் சொல்லாமல் இப்போது... அதை மாற்று... இதை சேர் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்கிறாராம் இயக்குனர். 


அதுமட்டுமா... இயக்குனர் எடுத்த படங்களில் அவரது டீமும்... ஒரே நடிகர்களும்தான் வந்தனர். இது உச்ச நடிகரின் படத்திலும் தொடர்ந்து. இந்நிலையில் அந்த டீம் வேண்டாம் என்று ஒளி நடிகர் சொன்னதும் இயக்குனரை டென்ஷன் ஆக்க நீங்களும் வேண்டாம்... உங்களோடு படமும் வேண்டாம் என்று கழற்றி விட்டுவிட்டாராம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: