தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது.

 

இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் T. சிவா பேசியது ...

 

தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை  முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.

 

நடிகர் மைம் கோபி பேசியது....

 

உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து,  மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது.

 

இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் T. சிவா பேசியது ...

 

தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை  முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.

 

நடிகர் மைம் கோபி பேசியது....

 

உண்மையில் இப்படம் ஒரு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் முரட்டு தனமாக அவர் மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். ரவீனா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்‌ஷன் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிரவைத்து,  மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

మరింత సమాచారం తెలుసుకోండి: