சென்னை:
ஏங்க... அப்போ அந்த படத்திற்கு மட்டும் கொடுத்தாங்க... அதுமட்டும் தமிழ் பெயரா என்று நொந்து போய் உள்ளதாம் இந்த படக்குழு.


எந்த படக்குழு தெரியுங்களா? ரெமோ படக்குழுவினர்தான். இந்த பெயர் தமிழ் கிடையாது என்பதால் அரசின் 30 சதவீத வரிச்சலுகை படத்துக்கு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. (ஏங்க இது படத்திற்கு தலைப்பு வைக்கும் போதே தெரியாதா?)


அதனால் படத்தின் பெயரை ரெங்கநாதன் என்கிற மோகனா என மாற்ற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
ஆனால் பெயரை மாற்றுவதா... நெவர் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லிடுச்சாம்... அப்போ... வரிச்சலுகை... அம்புட்டுதான்.. அம்புட்டேதான்... ரெமோ என்ற பெயரை கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர். இதுவொரு பெயர்ச்சொல். சிவாஜி, ரோமியோ ஜீலியட் படங்களெல்லாம், அந்தப் பெயர்கள் பெயர்ச்சொல் என்பதால் வரிவிலக்கு பெற்றன.


அந்தவகையில் ரெமோவுக்கும் வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாம் தயாரிப்பு தரப்பு.  எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்றாங்கப்பா...


Find out more: