டமாஸ்கஸ்:
அகதிகள் முகாம்மீது ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததால் 12 பேர் பலி உள்ளதாக சிரியா போராளிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.


சிரியாவில் அதிபருக்கு எதிரான புரட்சிப்படையினர் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை பிடித்து அராஜகம் செய்து வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி போர்களத்தில் குதிக்க  ரஷியாவும் முடிவு செய்தது.


இதையடுத்து பல்வேறு பகுதிகளின்மீது ரஷிய விமானப்படைகள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலும் வீடுகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் நிவாரண முகாம்களின் அருகில் குண்டு வீசப்படுவதால் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர் என்று அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


இந்நிலையில், ஜோர்டான் நாட்டின் எல்லையொட்டியுள்ள தனிமையான பகுதியில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களை அமைத்து அகதிகளாக தங்கியுள்ளனர். இந்த முகாமின்மீது பறந்த ரஷிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரஷியா மீது போராளிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: