மும்பை:
ஹேக்... ஹேக்... என்று அதிரடித்துள்ளார் இளைஞர் ஒருவர். யாருடையதை தெரியுங்களா?


பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் பேஸ்புக் கணக்கைதான். இது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஹேக் செய்தது மட்டுமின்றி  ப்ரொபைல் இமேஜை மாற்றி உள்ளார். அத்தோடு விட்டாரா...? இல்லியே... ஒரு லைவ் வீடியோவையும் பதிவேற்ற தொடங்கிவிட்டார்.


அவ்வளவுதான் பாலிவுட் ரசிகர்கள் செம ஹேப்பியாகி இருக்கிறார்கள்... ஹிர்த்திக் ரோஷன் தான் பேசபோகிறார் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்க... வீடியோவில் வந்ததோ வேறு யாரோ ஒரு இளைஞர். அடப்பாவி... யார் பேஸ்புக்கில் யார் வருவது என்று அதிர்ச்சியாகியுள்ளனர்.


இதுகுறித்து அறிந்த ஹிரித்திக் ரோஷன் உடனே போலீசாரிடம் புகார் செய்து தன் கணக்கை ஒருவழியாக மீட்டுள்ளார். இப்போது அந்த ஹேக் இளைஞர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம தில்லுதான்யா... தில்லுதான்....



Find out more: