'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சசிகுமார் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் 'கிடாரி' திரைப்படம் வெளிவந்தது. 


இதையடுத்து அவர் 'அலப்பறை' என்ற திரைப்படத்திலும், மேலும் சில பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக நடித்து வரும் சசிகுமார் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இவர் இன்று தனது 41-வது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். 


தமிழ் ஹெரால்டு சார்பில் நெஞ்சகனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: