'காதல்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவான பரத் இதையடுத்து சில ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இவர் நடித்த வந்த படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. 


அதனால் தற்போது பரத், தமிழ் சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் போனது. புதிதுபுதிதாக நடிகர்கள் வருகை தருவதால், பரத்திற்கு யாரும் பட வாய்ப்புகள் அளிப்பதில்லை. ஒரு சில இயக்குனரிடம் அவர் வேண்டி கேட்பதால், அவர்கள் படத்தில் மட்டும் நடிக்க, அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.


 தற்போது விஜய் மில்டன் இயக்கும் 'கடுகு' மற்றும் 'பொட்டு' ஆகிய இருதிரைப்படங்களில் மட்டும், பரத் நடித்து வருகிறார். அதுவும் 'கடுகு' திரைப்படத்தில் வில்லன் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், சினிமாவில் தன்னை மீண்டும் பிரபலமாக்கி கொள்ள, பரத் தற்போது பெரும் முயற்சி எடுத்து வருகிறார் என பேசப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: