மும்பை:
என்னப்பா... இப்படி செய்துட்டீங்களேப்பா... என்று புலம்பி வருகின்றனர் விமானப்பயணிகள். தெரிந்தது இது... தெரியாமல் எத்தனையோ...


ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிர்ஜீ சல்லா (35) என்ற தொழிலதிபர் நேற்று காலை உயர்வகுப்பில் மும்பையில் இருந்து ராஜ்கோட் சென்றார். இவருக்கு விமானத்தில் காலை உணவு கொடுத்ததாங்க. இதில் சன்னாமசாலாவும் கொடுத்தாங்க... இதில்தான் இருந்திருக்கு அதிர்ச்சியோ...அதிர்ச்சி.


என்னன்னு கேட்கிறீங்களா? சன்னா மசாலாவில் கொண்டக்கடலை இருக்கலாம். ஆனால் கரப்பான் பூச்சி இருக்கலாமோ. ஆனால் இருந்துச்சேப்பா... இது தெரியாமல் முதலில் சாப்பிட்டு விட்டார். பின்னர் தெரிய வர வாந்தி வராத குறைதான். 


இதுகுறித்து அவர் விமான பணியாளர்களிடம் கூறிய போது மற்றொரு பிளேட் உணவு வழங்குவதாக தெரிவிக்கவே... அடப்பாவிங்களா? இதுலேயே இப்படி... இன்னொன்னா என்று மிரண்டவர் இமெயில் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு புகார் கொடுக்க... ஜெட் ஏர்வேஸ் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் போட்டு இருக்கு ஒரே போடாக... இதனால் அவர் நொந்து போய் உள்ளது. 



Find out more: