சென்னை:
பாராட்டு மழையில் நனைந்து இருமி வருகிறாராம் இவர். பல படங்கள் செய்யாததை ஒரேயொரு படம் செய்து காண்பித்து விட்டது.

அவர் யார் தெரியுங்களா... கபாலி படத்தில் நடித்த தன்ஷிகாதான். கபாலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். தன் நீளமான முடியை வெட்டி வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்திருக்கிறார்.


தன்ஷிகாவின் நடிப்பை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் ‘ஏஞ்சலீனா ஜீலி’, தலைவி, ஆக்‌ஷன் ராணி என்று சமூக வலைதளங்களில் பாராட்டு மழையாக பொழிந்து வருகின்றனர். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கேள்விப்பட்டதுமே, மறுப்பு சொல்லாமல் தன் நீள முடியை வெட்டிக் கொள்ள சம்மதம் சொன்ன தன்ஷிகா இப்போ அதற்கான பாராட்டு அறுவடையை அறுத்து வருகிறார். 


தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டுகளால் மகிழ்ச்சியடைந்த தன்ஷிகா, ரசிகர்களுக்கு தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


Find out more: