சென்னை:
போலீஸ் ஸ்டேஷனில் போய் கையெழுத்து போட வேண்டும் என்ற கோர்ட் உத்தரவில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினார்  பிரேமலதா. இதுகுறித்து அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.


இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இதில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று பிரேமலதாவிற்கு உத்தரவிடப்பட்டது.


ஆனால் இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பிரேமலதா மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது. மேலும் இரண்டு வாரத்திற்கு  கையொப்பமிட உத்தரவிட்டது மீண்டும் கோர்ட் உத்தரவிட்டது.


மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ.5 ஆயிரம் கட்டவும் பிரேமலதாவிற்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கோர்ட் உத்தரவை ரத்து செய்ய கோரியும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தவும் உச்ச நீதிமன்றத்தில் பிரேமலதா மேல்முறையீடு செய்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனை காலம் ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்ளமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Find out more: