சென்னை:
ஏன் லுங்கி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே... என்று நீதிபதிகள் போலீசாருக்கு குட்டு வைத்த சம்பவம் நடந்துள்ளது. எங்கு தெரியுங்களா? 


வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவானதை அடுத்து, அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் ஆர்.எஸ்.தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.


 இந்த மனு நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனிப்படை அதிகாரிகள், தங்களது புலன் விசாரணை குறித்து அறிக்கையை தாக்கல் செய்தனர்.


 இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சரிவர இந்த வழக்கை விசாரிக்கவில்லை என தெரியவந்தால், வழக்கை வேறு புலன்விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போதுதான் போலீசாருக்கும் குட்டு வைத்தனர். எப்படி தெரியுங்களா? 


 இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு காவல் துறை அதிகாரிகள் சீருடை அணியாமல், சாதாரண உடையில் வந்திருந்தனர். இதை பார்த்த நீதிபதிகள், ‘நீதிமன்றத்திற்கு வரும்போது முழுமையான சீருடையில் இருக்கவேண்டும். சாதாரண உடையில் ஆஜராவதற்கு பதில், லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் சங்கிலி, கயிறு கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே?’ என்று கண்டனம் தெரிவித்ததுதான் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: