சென்னை:
நடக்கும் என்று சொல்கிறார்கள்... நடக்குமா? என்ன நடக்கிறது என்று நாமும் காத்திருப்போம். என்ன விஷயம் புரியலையா?


இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான். இவரை பார்க்க வேண்டும் என்ற ஆசை சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ளது. 


ஏன், பிரபலங்கள் கூட இவருடைய ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர் டோனியும் தீவிர ரஜினி ரசிகர்தான்.
டோனி வாழ்க்கையை தற்போது படமாக எடுத்துள்ளனர், இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இதன் விளம்பர நிகழ்ச்சியில் டோனி கலந்துக்கொண்டு வருகிறார்.


விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டோனி பின்னர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவும் உள்ளதாக கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: