சீனா:
பெரிசு... பெரிசு... செம பெரிசாக அமைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது சீனா. என்ன விஷயம் என்றால்...


பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கிதான் அது. 


30 கால்பந்து மைதானம் அளவிலான அந்த மிகப்பெரிய தொலைநோக்கியை தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் அமைத்துள்ளது. சீனா. 500 மீட்டர் பரப்பளவு, 30 டன் எடை கொண்ட இதை அமைக்க 1.2 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் 1264 கோடி ரூபாய்) செலவாகி உள்ளது. 


பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும். இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த ராட்சத தொலைநோக்கி நாட்டுக்கு சீனா அர்ப்பணித்துள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: