
வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரிதுஸ்ரீ இந்த ஆண்டு +2 தேர்வில் 600க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றால் அவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும் நிலையில் தேர்வின் முடிவை எதிர்பார்த்திருந்த ரிதுஸ்ரீ, தேர்வு முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
எதிர்பார்த்ததைவிட குறைவான மதிப்பெண்கள் வந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த ரிதுஸ்ரீ, தன்னால் எம்பிபிஎஸ் படிக்க முடியாதே என்று, பெற்றோர்கள் சமாதானப்படுத்தியும் விரக்தியில் தூக்கில் தொங்கினார். பெற்றோர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோர்கள் கதறியழுதனர்.
click and follow Indiaherald WhatsApp channel