கொல்கத்தாவை சேர்ந்த ஸ்வஸ்திக் தத்தா பெங்காலி தொலைக்காட்சி தொடர் பிரபலங்களில் ஒருவர். தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிற்காக வாடகை கார் நிறுவ காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் டிரைவர் திடீரென வண்டியை நிறுத்தி, வேறு ஒரு சவாரி கிடைத்துள்ளதாகவும், காரில் இருந்து இறங்குமாறும் கூற, நடிகையோ குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு செல்ல வேண்டும் என இறங்க முடியாது என கூறியுள்ளார்.இருவருக்கும் வாக்குவாதம் நிகழ, ஆத்திரமடைந்த டிரைவர், நடிகையை குண்டுகட்டாக தூக்கி சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த ஸ்வஸ்திகா, டிரைவரையும் காரையும் செல்போனில் படம் பிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
click and follow Indiaherald WhatsApp channel