பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன், அடுத்து ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளார். முதன்முறையாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். மேலும் காமெடி ரோலில் சூரி நடிக்கவுள்ளார். 


அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சமந்தா நடிக்கவுள்ள கதாப்பாத்திரம் வெளியாகியுள்ளது.


இந்த படத்தில் சமந்தா சிட்டி பெண் ரோலிலும், சிவகார்த்திகேயனின் எதிர் வீட்டு பெண்ணாக, இயல்பான கதாப்பாத்திரத்திலும் நடிக்க உள்ளார். இதுவரை பார்த்திராத சமந்தாவை இந்த படத்தில் நாம் பார்க்கலாம் என தகவல்கள் வந்துள்ளன.


மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவதற்கான லொகேஷனை தற்போது படக்குழுவினர் தேர்வு செய்து வருகிறார்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: