'ரெமோ' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் நயன்தாரா ஹீரோயினாகவும், வில்லனாக மலையாள நடிகர் பகத் பசிலும் நடிக்கவுள்ளனர்.


மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சதிஷ் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து தற்போது இன்னொரு நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


அவர் வேறு யாருமில்லை.... நான் ஸ்டாப்பாக பேசி கொண்டிருக்கும் நமது ஆர்.ஜே.பாலாஜி தான். இவர் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். சிவகார்த்திகேயன் உடன் இணைந்து இவர்  நடிக்கவுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: