பெர்லின்:
அட உங்க மூக்கும் போதும்ப்பா... நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கலாம் என்று ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.


அய்யோ... அப்போ மூக்கு என்கிறீர்களா? அட மூக்கை ஒன்றும் செய்ய மாட்டாங்கப்பா... மனிதனின் மூக்கில் வாழும் ஒருவகை கிருமிகளில் இருந்து சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கலாமாம்.


தற்போது புழக்கத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை விட நோயை ஏற்படுத்தும் கிருமிகளின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது. இதனால் பல நோய் எதிர்ப்பு மருந்துகளால் கிருமிகளை ஒன்றும் செய்ய முடிவதில்லை. எனவே புதிய வகை நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகிறார்கள்.


இந்நிலையில் மனிதனின் மூக்கில் வாழும் ஒருவகை கிருமிகளில் இருந்து சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கலாம் என்று ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படி உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்து மூலம் மிக சக்தி வாய்ந்த நோய்களை உருவாக்கும் பேத்தஜன், எம்.ஆர்.எஸ்.ஏ. ஆகிய கிருமிகளை கூட கொல்ல முடியுமாம்.


தற்போது பல நோய் எதிர்ப்பு மருந்துகள் மண்ணில் வாழும் பாக்டீரியாக்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்பால் வலிமையான நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: