நடிகர் விஷால் தற்போது சூரஜ் இயக்கும் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, சூரி, வடிவேலு, ஜெகபதி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். 


கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி நிலையில் உள்ளது. விஷால் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தற்போது நடித்து வருகிறார். 


இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்தில், ஒரு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு பக்கம் ஸ்டண்ட் இயக்குனர் கமலக்கண்ணன் அவரை இழுப்பது மாதிரியும், இன்னொரு பக்கம் டான்ஸ் மாஸ்டர் ஷோபி அவரை இழுப்பது மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு, ஒரே நேரத்தில் ஸ்டண்ட் செய்வானா.... இல்லை டான்ஸ் ஆடுவனா.... என பதிவு செய்துள்ளார். 



మరింత సమాచారం తెలుసుకోండి: