சென்னை:
குழந்தைகளை மையப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை இப்ப அதிகரிக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுவும் ஒரு நல்ல துவக்கம்தான்.


இப்ப வர்ற படங்கள் குழந்தைகளை மையப்படுத்தி வருது. குழந்தைகளின் உளவியலைப் பேசும் படங்களாக அமைந்திருப்பது செம மாற்றம்தான். 


‘பசங்க’ படம் போட்டு கொடுத்த பிளாட்பார்மில் பலர் ரயில் ஓட்டி விட்டனர். சில படம் சுமார் என்றாலும் பல படங்கள் சூப்பராக குழந்தைகள் உளவியலை கூறியது என்பது மறுக்க முடியாது. அந்த வகையில் ‘பசங்க 2’ தனி ஹிட் அடித்தது. 


இப்ப ‘அம்மா கணக்கு’  ‘கொளஞ்சி’ என வெவ்வேறு கோணத்தில் குழந்தைகளின் படங்கள் வருது. அடுத்து வர்ற இருக்கும் அப்பா படமும் இந்த கேட்டகிரியில்தான் அமைய உள்ளதாம். அப்ப தமிழ் சினிமா வேறொரு தளத்திற்கு மாற்றம் ஆகிகிட்டு வருது என்கின்றனர் சினிமா விரும்பிகள். 


குழந்தைகள் சினிமாவை ரசிகர்கள் ஆதரித்தால்தான் தரமான குழந்தைகள் சினிமா தொடர்ந்து வரும்’ என்றும் சொல்வது இயக்குனர்கள்தான். என்ன ரசிகர்களே நீங்க ரெடியா?


మరింత సమాచారం తెలుసుకోండి: