புதுடில்லி:
இப்போ எதிரிகள்... அப்புறம் ஜோடிகள் என்ன ஒரு அழகிய முரண்பாடு பார்த்தீர்களா? என்ன விஷயம் தெரியுங்களா?


விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் பயஸ் மற்றும் போபண்ணா எதிர் எதிர் அணியில் மோதிக்கொள்ளும் நிலையில் உள்ளனர் என்பதுதான் அது. 


விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணா ஆகியோர் தகுதி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான். 


இதில்தான் இருக்கு டுவிஸ்ட்டு. லியாண்டர் பயஸ் - போலந்து வீரர் மார்சின் மட்கோவ்ஸ்கியும் இணைந்து விளையாடுகிறார். இதேபோல் ரோஹன் போபண்ணா, ருமேனிய வீரர் ப்ளோரின் மெர்ஜியா-வுடன் கைக்கோர்க்கிறார். அப்படின்னா... அதே...அதேதான்...


இந்த ஜோடிகள் எதிர் எதிராக நின்று மோதிக்கொள்ள உள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் இரு வீரர்களும் எதிரெதிராக மோதிக்கொண்டுதான் ஆகவேண்டும்.


இது இப்படின்னா... இவர்கள் இருவரும்தான் ரியோ ஒலிம்பிக் போட்டி இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாட உள்ளனர் என்பது இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டிய ஒன்றாகும். இது ஒரு அழகிய முரண்பாடு இல்லையா...



మరింత సమాచారం తెలుసుకోండి: