
இந்த அமைப்பில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து விண்ணுக்கு மனிதனின் உடல்லிலுள்ள டிஎன்ஏ மாதிரியை அனுப்பவுள்ளோம். அதன் மூலம் மனித உடல் எந்த அளவுக்கு அந்த இடத்தில் தாக்குபிடிக்கும் சக்தியை கொண்டிருக்கும் என்பதை கண்டறிய உள்ளோம். அதுமட்டுமில்லாமல் விண்வெளியில் பிரிண்டிங் செய்வது சாத்தியமா என்பதை கண்டறிய என்எஸ்எல்வி கலாம் 2 என்ற புதிய பலூன் செயற்கைகோளை உருவாக்கியுள்ளோம்.

அதில் பிரிண்டருடன் 50 பக்கங்கள் கொண்ட பிரிண்டிங் பேப்பரையும் வைத்துள்ளோம். அதற்கேற்ற வாறு செயற்கைகோளுக்கு எற்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எடுக்கப்படும் கலாம் படங்களை அவர் குறித்த சுயவிவரங்களை எழுதி நேர்த்தியாக பைண்டிங் செய்து ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
click and follow Indiaherald WhatsApp channel