சென்னை:
காலை வாரி விட்ட படங்களால் சுதாரித்து கொண்ட நடிப்பு திலகத்தின் பேரன்... இப்ப தன் தாத்தா பேரு கொண்ட படம் தன்னை கைத்தூக்கி விடும்னு எதிர்பார்த்து இருக்காராம். ஏமாற்றம் தீர்ந்தால் சரிதான்.


நடிப்பு திலகத்தின் பேரன் யானை படத்தில் அறிமுகம் ஆகி சக்ஸஸ் நாயகன் என்ற பேர் எடுத்தார். அடுத்தடுத்து வந்த படங்களும் நன்றாகத்தான் போனது. இடையில் பாரீன்கார துரை படமும், அதுக்கு அப்புறம் வந்த மாயம் படமும் தியேட்டர்களை விட்டு சீக்கிரமே மாயமானதால் சறுக்கல் ஆரம்பித்தது.


சுதாரித்து கொண்ட பேரன் வாரிசு... இப்ப டீடெய்லா கதை கேட்டு பிரிச்சு மேய்ந்த பிறகுதான் சைன் போடறாராம். இப்படி கதை கேட்டு படப்பிடிப்பு முடிஞ்ச தாத்தா பேர் கொண்ட படம் ரிலீசுக்கு தயார். இதோட டீசரு வெளியாகி நல்ல பேரு எடுக்க... பேரன் வாரிசு இப்போ ஹேப்பி அண்ணாச்சி... ஏமாற்றம் நீங்கினால் சரிதான்.

வீர சிவாஜி


మరింత సమాచారం తెలుసుకోండి: