சென்னை:
ரஜினி எதை செய்தாலும், சொன்னாலும் அதை அப்படியே செய்வது அவரது ரசிகர்களின் போக்கு. இது இன்று நேற்று இல்லை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பழக்கம்.
அவரது பாணியை பின்பற்றாதவர்களே இல்லை என்று சொல்லலாம். சல்யூட் வைப்பதில் இருந்து, கண்ணாடி கழற்றி மாட்டுவது... நான் ஒரு முறை சொன்னா என்ற வசனம் என்று அவரை பின்பற்றுகின்றனர். அதேபோல் தற்போது கபாலி படத்தில் வரும் சில மலேசிய வார்த்தைகளையும் இப்போது உச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
தற்போது இந்த வார்த்தைகள் தமிழகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
மாத்திரை - போதை மருந்து, கட்டா -துப்பாக்கி, சரக்கு - பெண், டீத்தண்ணி - டீ, கூட்டாளி- நண்பன், சடையன் - சீனாக்காரன் போன்றவை மலேசிய தமிழ் வார்த்தைகள். இதை கபாலி படத்தில் ரஜனி உச்சரிக்க இப்போது இதுதான் தமிழக ரசிகர்கள் மத்தறில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்பே... மகிழ்ச்சி என்ற வார்த்தை அனைத்து ரசிகர்களாலும் உச்சரிக்கப்பட்டு விட்டது.